கலாபக்காதலன்

இந்தத் திரைப்படத்தைப் பற்றி எழுதும்போது படத்தின் முடிவிலிருந்தே தொடங்க வேண்டியிருக்கிறது. “காதலில் ஏது உண்மைக் காதல், கள்ளக் காதல்” என்ற இயக்குநரின் வரிகளுடன் படம் முடிகிறது. படத்தின் கருவும் இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் திரைப்படம் இது குறித்துப் பேசவில்லை. சினிமா உலகம், ரசிக உலகங்களுடன் இயக்குநர் செய்து கொள்ளும் சமரசம் அல்லது இதுவே இயக்குநரின் சமூகப் பார்வையாகவும் இருக்கலாம்.

அக்காவின் கணவனை தங்கை நேசிக்கிறாள். இதை அக்காவின் கணவன் அணுகும் முறையே கதையின் பிரதான அம்சம். வழக்கம்போல ஆணின் பார்வையில் பெண்ணின் பிரச்ச்சினை பார்க்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்படுகிறது.

அக்காவின் வீட்டில் தங்கியிருக்கும் தங்கை அக்கா கணவனின் பண்பு, நடத்தைகளைப் பார்த்து அவனைப் போல தனக்கு ஒரு கணவன் கிடைப்பானா என்று நினைப்பதாகவே கதை ஆரம்பிக்கிறது. இது மனிதர்களின் சாதாரண மனநிலையாகும். அப்படியொரு பெண் தனக்கு மனைவியாக அமைவாளா என்று ஆணும், இப்பிடியொரு கணவன் தனக்கு கிடைப்பானா என்று பெண்ணும் ஏக்கப்படுவது சமூகத்தில் ஒரேவிதமாகப் பார்க்கப்படுகிறதா என்று கேட்டால் இல்லையென்பதே பதில். பெண் குறித்த ஆணின் விருப்புகள், ஆசைகள், ஏக்கங்கள் சமூக அங்கீகாரம் பெற்றவையாகவும், ஆண் குறித்த பெண்ணின் உணர்வுகள் விரசமாகவும், காமவெறியாகவும், நடத்தைகெட்டதாகவும் பார்க்கப்படுகின்றன. இதுவே சினிமாவிலும் பிரதிபலிக்கிறது.

கணவனைத் தேர்வுசெய்வதில் சமூகத்தில் பெண்களுக்கிருக்கும் சிரமங்கள் பற்றி தங்கை விளக்கி கூறுகிறாள். தனக்குப் பொருந்தாத, முன்பின் அறிமுகமில்லாத ஒரு ஆணிடம் வாழ்நள் முழுவதையும் பலிகொடுப்பதைவிட, தனக்குத் தெரிந்த, தனக்குப் பிடித்த ஒரு ஆணை மனதில் நேசித்துக் கொண்டு அந்த வீட்டிலேயே ஒரு மூலையில் இருக்கிறேனே என்று தனது நேசத்துக்குகான காரணத்தையும் கூறிவிடுகிறாள்.

இந்த விருப்பத்தை, தன்னை தனது மனைவியிடமிருந்து பறிக்க விரும்புவதாகவும், தன்னுடன் படுக்க விரும்புவதாகவும் எடுத்துக்கொள்ளும் அக்கா கணவன் முதலில் அவளுக்கு இது தப்பு என்று “புத்தி” சொல்கிறான். அவள் தனது நேசத்தை மாற்றிக்கொள்ளப் போவதிலை என்பதிலிருந்து திரைப்படம் அவளை வில்லியாகச் சித்தரிக்க ஆரம்பிக்கிறது. ஒரு சாதாரண பெண்ணின் சாதாரண ஆசை அது பெண்ணிணுடையது என்பதால் வக்கிரமாக, காமவெறியாகக் காட்டப்படுகிறது. கனவுப்பாடல்களும், அக்காவின் கணவனுடன் அவள் போடும் சவால்களும், அவனது உடம்பை விரும்புவதாகக் காட்டப்படும் காட்சிகளும் சேர்ந்து அவள் மீது படம் பார்ப்பவர்களுக்கு வெறுப்பையும், எரிச்சலையும், கோபத்தையும் உண்டாக்குவதில் இயக்குநருக்கு வெற்றி கிடைக்கிறது.

இத்தனைக்கும் கணவன் இந்தப் பிரச்சினை பற்றி தனது மனைவியுடன் கதைக்கவேயில்லை. சம்பந்தப்பட்ட மூவரும் ஒன்றாக இருந்து கதைக்க வேண்டிய விடயம் என்று கணவனுக்கு உணர்வேயில்லை. இது படத்திலும் முக்கியப்படுத்தப்படவில்லை.

தான் அவளிடமிருந்து தப்பிக் கொள்வதற்காக, அவளை விரும்பும், ஆனால் அவள் விரும்பாத இளைஞனை ரகசியமாக அழைக்கிறான். அவனோ அவளது மனதை மாற்ற முடியாத நிலையில் அவளைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குகிறான்.

அப்புறமென்ன, “கெட்டுப்போன” பெண்ணை வேறு யாரும் திருமணம் செய்யமாட்டார்கள் என்ற வாய்ப்பாட்டைப் பாடி வன்முறையாளனுக்கே அவளைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். இந்தக் காட்சியில் கூட அவளை வன்புணர்ச்சி செய்தவனை காதலால் பாதிக்கப்பட்டவனாகவும், அவளை இன்னும் திருமணம் செய்யத் தயாராக இருக்கும் தியாகியாகவும்(!), அவளை அழுத்தக்காரி, பிடிவாதக்காரியாகவுமே காட்டப்படுகிறது.

இப் படத்தில் குறிப்பிடப்படும் பெண்ணின் பிரச்சினையை இயக்குநர் நேர்மையாக அணுகவில்லை. அந்தப் பெண்ணின் பிரச்சினையை அவளின் பார்வையில் சொல்லப்படுவதற்கு படத்தில் கவனமாக சந்தர்ப்பமே இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

திரைக்கதை அப்படி எழுதப்பட்டுள்ளது. அதை ஏன் பெண்ணுக்கு எதிரானதாகப் பார்க்கப்பட வேண்டும் என்று கேள்வி எழலாம். எழுதும் கதைகளும், எடுக்கும் படங்களும் பெண்களை ஏன் இப்படிச் சித்தரிக்க வேண்டும் என்ற கேள்விதான் இதற்கான பதிலாகும்.

படத்தின் முக்கியத்துவம் ஆணை இராமனாகக் காட்டுவதாகவே அமைக்கப்படுகிறது. இதற்கேற்ப அந்தப் பெண்ணின் பிரச்சினை கையாளப்பட்டுள்ளது.

இராமர்களைக் காட்டுவதற்கு எப்போதும் சூர்ப்பனகைகள் தேவைப்படுகிறார்கள். இராவணனிடமிருந்து திரும்பி வந்த சீதை தன்னை “நிரூபிக்க” இராமனால் தீக்குள் இறக்கி விடப்படுகிறாள். ஆனால் தன்னை நிரூபிக்க சூர்ப்பனகையின் மூக்கை அரிவதே இராமனுக்கு போதுமானதாக இருக்கிறது.

தன்னை சத்திய சோதனை செய்வதற்கு காந்திக்கு நிர்வாணமாக ஒரு இளம் பெண் தேவைப்படுகிறது.

இந்த மனோபாவம்தான் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்கிறது. இதுவே சமூகத்திலும் காணப்படுகிறது. இதுவே சினிமாவாகவும் தரப்படுகிறது.

———————————————————————————————–

10 கருத்து x கருத்து

உங்கள் கண்ணோட்டம் சரியானது! ஆண்கள் பெண்கள் மீது கொள்ளும் ஆளுமை தான் எல்லாவற்றிற்கும் காரணம்! அது தான் படத்திலும் தெரிகிறது!

AnonymousMay 25th, 2006 at 20:15

அங்கிள் நீங்க நல்லவரா கெட்டவரா

AadhiraiMay 25th, 2006 at 21:01

நல்ல விமர்சனம் பொறுக்கி அவர்களே!

AnonymousMay 25th, 2006 at 21:34

?/////////////////////////??????????????????????????????????

கிருபா.மMay 25th, 2006 at 21:36

பெயரே வித்யாசம் போங்க…..

BalajiMay 25th, 2006 at 22:30

அருமை

suguandiwakarMay 25th, 2006 at 22:58

நல்ல ஒரு பார்வை.ஆனால்,நீங்கள் தொடக்கத்தில் குறிப்பிட்டிருப்பதைப் போல நல்லக்காதல்,கள்ளக்காதல் போன்ற கற்பிதங்களைத் தகர்ப்பதை நோக்கி படம் நகர்ந்திருக்க வேண்டும்

கில்லிMay 27th, 2006 at 22:33

[...] திரைப்படத்தை வைத்துக் கொண்டு சமூகத்தின் assumptionsஐ கவனிக்கிறார்.   [...]

கோம்பை May 28th, 2006 at 06:58

[...] Find a man to rape her and then we can get her married off to him (in Tamil font) [...]

maduraMay 28th, 2006 at 03:55

Got to your page from premalatha’s link! I did not see the movie. But I got totally charmed by your commentary. On the one side it is unfortunate that there are such terrible explicitly criminally insensitive movies taken in Tamil Nadu and on the other hand we have tamil bloggers who can think and express so elegantly well with the heart and the brain in the right place and the daring backbone to stand straight! Its people like you who let others still feel proud of being a tamilian! Your words are so good. Keep it up. Express more. Made my weekend begin quite happily with a positive note!

கருத்து x கருத்து

கருத்து x கருத்து


Warning: Illegal string offset 'solo_subscribe' in /var/www/porukki/wp-content/plugins/subscribe-to-comments/subscribe-to-comments.php on line 304

Subscribe without commenting