கறுப்பு என்பது கறுப்புத்தானா?

மொழி என்பது பொதுவானதல்ல, அது ஆண் மொழியே என்று பெண்கள் மொழியை கட்டுடைத்து வருகின்றனர். இவர்களது நீண்டகாலப் போராட்டங்களின் பின் மொழியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழில் “கற்பழிப்பு” என்பதைக் குறிப்பிடலாம். ஆங்கிலத்தில் Human/Huwoman விவாதங்கள் நடந்து வருகின்றன.

disabled, handicapped போன்ற சொற்கள் நீக்கப்பட்டு differently abled, physically challenged போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மனிதக் கூர்ப்பு நிகழ்ந்து இத்தனை நூற்றாண்டுகளின் பின்னாவது மொழியில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவது தேவையானதொன்றேயாகும்.

ஆனாலும் “கறுப்பு” என்ற சொல் உலகின் அனைத்து மொழிகளிலும் இன்னமும் எதிர்மறையான சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு வருவது ஏனோ நெருடுகிறது.

தொலைக்காட்சி, தினசரி, சினிமாக்களில் இன்னமும் ஆபிரிக்கர்/ஆசியர்களைக் குறிப்பதற்கு Blacks என்றே பாவிக்கின்றனர். சில இடங்களில் Colored people என்று குறிப்பிடுவதுகூட ஒரு ஏமாற்றாகவே இருக்கிறது.

யேசு கூட வெள்ளையாகவே இருக்கிறார் (Madonnaவின் Like A Prayer பாடலைத் தவிர்த்து..!)

தமிழில்-
கறுப்புநாள் / கரிநாள்
கறுப்புக் கொடி
கறுப்புப்பணம்
கறுப்புச்சந்தை
கறுப்புப்பட்டியல்
கறுப்பு ஆடு (Who is the blacksheep என்ற சிவாஜியின் பைலட் பிரேம்நாத் பாடலை நினைவில் கொள்க!!)
பிளாக்மெயில் (தமிழ் என்ன?)
பிளாக் அவுட் (தமிழ் என்ன?)
……….

இது போன்ற கறுப்பை குறிப்பிடும் சொற்கள் உலகின் பிரதான மொழிகள் அனைத்திலும் ஒன்றாகவே உள்ளன. அப்படியானால் நாம் அல்லது உலகில் பயன்படுத்தும் மொழியென்பது “வெள்ளை”நிறத்தவர்களின் மொழியா? அவர்களது மொழியை அப்படியே எமது மொழிக்கு பெயர்த்து வைத்திருக்கிறோமா?

தமிழில் கறுப்பின் எதிர்மறைப் பாத்திரம் கடுமையாகவே இருக்கிறது.
கதை/கவிதகளில்-
… அவன் முகம் கறுத்தது.
…. அவளது முகத்தில் கரி பூரினான்.

சிறுபிள்ளைகள் அதிகம் விரும்பிப்படிக்கும் அம்புலிமாமா வகையறாக்களில் தேவர்கள்/நல்ல மனிதர்கள் எல்லோரும் வெள்ளை. அசுரர்கள்/கெட்ட மனிதர்கள் எல்லோரும் கறுப்பு. கறுப்பின் எதிர்மறை பிள்ளைப்பிராயத்திலிருந்து இப்படித்தான் ஊட்டப்படுகிறது.

இன்று இலங்கை, இந்தியா, இடம்பெயர்ந்த நாடுகளில் இரண்டறக் கலந்துவிட்ட சினிமாவும் இதில் குறைவைக்கவில்லை. வில்லன், வில்லனின் அடியாட்கள் எல்லோரும் கறுப்புக் கறுப்பாய் இருப்பார்கள். கதாநாயகன்/கதாநாயகி பளீர் வெள்ளையாக இருக்க அவர்களது நண்பர்கள் மட்டும் கறுப்பாக இருப்பார்கள். ஏழை/கூலி என்று யாரையாவது காட்டினால் அவர் கறுப்பாகவே இருப்பார்.

மொழியில் இந்த திட்டமிட்ட நிறப்பாகுபாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டாலும் அது பற்றி போதுமான விவாதங்கள் நடத்தப்படவில்லைப்போல் படுகிறது. குறிப்பாக “கறுப்பர்கள்” ஆகிய நாம் எம்மால் பயன்படுத்தப்படும் மொழியில் எம்மைக் குறிவைக்கும் மொழிப்பாகுபாடு குறித்து கவனம் கொள்ளக்கூடாதா?

எனக்கென்னவோ தமிழ்மொழி என்றால் இந்தியாவில் மும்பாய் எக்ஸ்பிரஸிலும், ஈழத்தில் உந்துருளியிலும் கவனம் குவிவதாகத் தெரிகிறது.

பிந்திய இணைப்பு:
சூடானிய டிங்கா பெட்டைகளில் ஒருத்தி – ஒரு பொடிச்சி

Technorati Tags:

3 கருத்து x கருத்து

[http://porukki.blogsome.com/2005/08/24/17/]

1.

ungalukku aarudhala oru seidhi. indhia saamigalin peyar ellam karuppudhaan. kaaliyil arambichu.

cartoon il kuda villain singam konjam karuppa podranga.

எழுதியவர்: aathirai — 24 August 2005 @ 21:12

2.

இப்படி நிறைய சொல்லலாம்.
‘உலக’ திரைப்பட விழாக்களில் காட்டப்படுற அளவுக்கு மசாலா கலந்தடிக்கும் திருவாளர் மணிரத்னத்தின் தவீரவிhதிகள்ஃதமிழர்கள் கறுப்புத்தான்.

உண்மையான திராவிடிச்சிகள்/நடிகைகள் இதுவரை காலத்தில் எத்தனைபேர் வந்தார்கள்- நம் தமிழர் சினிமாவில்?
ராதா, அர்ச்சனா..
கறுப்பு என்பது வேறுதான். நந்திதா தாஸ் போல நடிகைகள் வருகிறபோது அவர்களை கறுப்பழகி என விவரிக்கிற ஊடகங்களிற்கு புகார் வண்ண, கண்ணகியின் கன்னங் கரு நிறம் தெரியவே தெரியாது போலும்.

ஆனால் இப்போது கறுப்பு/கறுப்பர்களை Negro என்று தமக்குள் கூப்பிட்டால்கூட அது திமிராகத்தான் எழும்புகிறது. அதை ஒரு இழிசொல்லாய் யாராலும் பாவிக்க முடியாது.
என எதிர்ப்பிலக்கியம் இருக்கிறது.

இலக்கியத்திலாவது ‘இருக்கிறது’ என்று நம்புகிறோம்..

அதற்கு Maya anglou போன்ற ஆபிரிக்க-அமெரிக்கக் கவிகள் ‘he went to being called a Colored man after answering to “hey nigger”/Now you’ll get hurt if you don’t call hime ‘Black” என்றபடி வலுசேர்ககிறார்கள்.

ஆனால் -மாயா ஆஞ்ஸலோ போன்றவர்களுக்கு முன்னாலே- அவர்களது இருப்பிலும்
பெரும் அச்சுறுத்தலாக நிகழ்ந்துகொண்டேதானே இருக்கிறது Michael Jacksonனின் நிறமாற்றம்?
ஆழமாக, மிக மிக ஆழமாகஇ கறுப்பை பற்றி தாழ்வுணர்சிசயை ஏற்படுததிவைத்துள்ளார்கள்.
கறுப்பு ஆண்கள் தம் பெண்களை கறுப்பாய் விரும்புவதிலை;.
திராவிடர்களும் தம் பெண்களை கறுப்பாய் விரும்புவதிலைலை!

இந்தி நடிகைகள் வெள்ளைத்தோல் .. etc
தமிழின் நம்பர் ஒன் இதழ்’ குமுதம் ‘சிகப்பழகிற்காய்’ வெகுகாலமாய் பரிந்துரைக்கிற fair & lovely..!

இங்கு சமீபத்தில் ஒரு கவிதை நு{ல் வெளியீட்டு நிகழ்வில் ஆங்கிலத்தில் எழுதிறஒரு சிங்களக் கவிஞர் ஒருவர் கூறினார் fair & lovely — face cream ஒரு acid அதை முகத்துக்குப் போடுகிறார்கள்; அது முகத்தை வெளிறச் செய்கிறது என.
இந்தியாவில் bleaching தற்போது வெகுவெகு பிரபலம்.

இன்றைக்கு உலகமயமாதலில் -சகலவகையிலும்-
வெள்ளையர்கள் ஆதிக்கமே வளர்கிறது.வெள்ளையர்கள்
500+ ஆண்டுகளாய் திணித்த தாழ்வுணர்ச்சியின் எச்சத்தைக் கொண்டு தொடர்ந்து ‘கீழைத்தேசங்களை’ ஆண்டபடியே உள்ளார்கள்.

எழுதியவர்: ஒரு பொடிச்சி — 25 August 2005 @ 01:02

3.

if u can do add the rating (+/-) of thamizmanam.. its easier to see the further comments. thanx.

எழுதியவர்: ஒரு பொடிச்சி — 25 August 2005 @ 01:04

4.

Following is an article that was written by an American-born Tamil girl Rosha Manoranjan for the 2004 souvenir of Federation of Tamil Sangams of North America held in Baltimore, MD. I thought this would be of interest here

Thanks,
S. Sankarapandi
———————
BODY SCHMODY!
WRITTEN BY ROSHA MANORANJAN

“Don’t stay out in the sun too long—you’ll get dark.”
“Wear your best jewelry; you never know who you’ll meet at this wedding.”
“If you lose 10 pounds, I’ll buy you that paavada you wanted.”

If we got a rupee for each time we heard that, we’d be richer than Kamal Haasan! I don’t know about you guys, but I’m tired of trying to fit the mold of society’s perfect body. Who wants to stand in front of the mirror and critique every little part of their body? Get over it, girls! We don’t have to look like Aishwarya in order to be considered beautiful.

It was once a widely held belief that the only people who suffered from eating disorders were white, upper class women. This is not true! No group is immune to this disease, especially not those exposed to Western culture. Traditionally, the South Asian culture accepted heavier women. Yet, as soon as we integrated in the West, we adopted the portrayal of a “small and thin” ideal body. In a study of over 900 middle school girls, South Asians surprisingly reported greater body dissatisfaction than white girls. Acculturation can cause identity confusion. We are all aware that Indian and Sri Lankan girls are raised by their families to be obedient, “good” girls. Emotional turmoil thus arises when integrated with a culture that values independence and individualism. So, what else are we to do but develop low self-esteem, feelings of isolation and thus, eating disorders, right? Wrong! We need to change the value which society has placed on size and shape.

Let’s talk about our favorite Tamil film stars. While it’s wonderful to keep touch with our culture, these films are just not helping matters for women. As young white women aspire to look like the emaciated celebrities they see in the media, it only makes sense that young South Asian women faced with beautiful film stars of their own might wish to achieve the same physical goals. But, these images will affect the way we feel only if allowed! We have to realize that this ideal is dictated by airbrushed, impossibly thin images. No one is immune, but we need to not buy into this dangerous culture of thinness.

People from countries close to the equator generally have darker skin. This means us, ladies! However, it’s no secret among our families that lighter skin is likened to beauty. We are constantly being told to avoid sunlight for fear of getting darker. Even some words that mean “fair” also mean “beautiful” in some Indian languages. The detrimental media only serves to reinforce the ideal of light skin. Many popular Tamil movie actresses are fair skinned. This is interesting, seeing as how most of South Asia has darker skin. Many of you have heard of the Indian fashion magazine, Femina. With the cover girls’ bronze skin, blue eyes and Western features, you’d never be able to tell what ethnicity this magazine was trying to address. The message this conveys to us is that beautiful skin is white. This fascination with the West can be dangerous for young Indian American women’s self-esteem and health.

How has one standard of beauty for women become almost a universal ideal? According to Joan Jacobs Brumberg from “The Body Project,” the desire to be thin originated in the 1920’s in the US. This “slimming craze” has continued into the 21st century regardless of ethnic background or socioeconomic status.

In social and professional settings, women are positively reinforced for looking a certain way. Even within our own homes, our families have expectations regarding our appearance, especially prospective brides. Would you guys believe it if I told you that women living in countries like India appear much more content with their fuller body shapes. In fact, the cultural stereotype of attractiveness within these societies includes a fuller figure. But sadly enough, studies find that acculturation into Western societies dangerously facilitates the way in which women adopt the more stringent habits of the prevailing culture. It is apparently hard to “just say no” to society.

Ladies, we need to start counting our blessings, not our blemishes! It’s about time we celebrate all the amazing things our body does for us. It lets us laugh, dance and admire the beauty surrounding us. I’m sick and tired of playing tug-of-war with Western standards of ideal beauty. No one should be allowed to tell us what we should look like in order to feel good about ourselves. I will dress however I want, stay out in the sun as long as I want, and eat whatever I want. So stand up girls and eat that payasam!

———————————-

எழுதியவர்: Anonymous — 25 August 2005 @ 02:19

5.

ஆதிரை, பொடிச்சி, Anonymous – நீங்களும் எழுதியதற்கு நன்றி. நீங்கள் எழுதியவற்றிலிருந்து நான் இன்னும் பல தகவல்களைப் பெறக்கூடியதாக இருக்கிறது.

//if u can do add the rating (+/-) of thamizmanam.. its easier to see the further comments// பொடிச்சி, நீங்கள் எழுதிய இந்த விடயத்தை தமிழ்மணத்தில் எழுதியிருந்தபடி செய்து பார்த்தேன். வேலை செய்யவில்லை. தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும் எழுதிக் கேட்டேன். அவர்களிடமிருந்து பதிலெதுவும் வரவில்லை. வேறு யாராவது உதவினால் திரும்ப செய்து பார்க்கலாம்.

எழுதியவர்: porukki — 25 August 2005 @ 22:16

6.

நீங்கள் அனுப்பிய மடல் பதில் போட்டுருக்கேன். பாருங்க.
i think i can solve adding rating code to ur blog as i have done it successfully. kindly come online.

eswar

எழுதியவர்: eswar — 01 September 2005 @ 11:01

7.

தமிழ்மணத்தின் 2வது நிரலியைப் பயன்படுத்துவதில் போதிய கணனி அநுபவம் இல்லாததால, இதற்கு உதவி கேட்டு எழுதிய கடிதங்களிற்கு பதில்கள் தந்த காசி, மதிக்கும், ஒரேநாளில் நிரலியை அமைத்துத் தந்த ஈஸ்வர பிரசாத்திற்கும் (http://eprasadh.blogsome.com/) நன்றிகள்

எழுதியவர்: பொறுக்கி — 02 September 2005 @ 19:29

8.

Very Good !

எழுதியவர்: Anonymous — 13 September 2005 @ 20:18

9.

இப்போதுதான் இந்த பதிவை படித்தேன். வெகுநாட்கள் முன்பு ‘ப்ளாக் மெயில்’ பற்றி விவாதித்து அதற்கு (பதிலாக அல்ல இன்னொரு) இணையாக வொயிட் மெயில் என்றோரு பதத்தை அறிமுக படுத்தினோம். நானும் அனாதை ஆனந்தனும் மட்டுமே இதுவரை அதை, பொருத்தமான பொருளில் பயன்படுத்தியும் வருகிறோம். இன்னும் கூடுதல் விளக்கமும் பிண்ணணியும் பிறகு தருகிறேன்.

எழுதியவர்: ரோஸாவசந்த் — 13 September 2005 @ 22:04

10.

நன்றி ரோஸாவசந்த். Blackmail பற்றி நீங்கள் விவாதித்திருக்கின்றீர்கள் என்று அறியும்போது சுவாரசியமாயிருக்கிறது. இது பற்றி இன்னும் அறியத் தாருங்கள். இப்படியான மொழி விடுவிப்பில் எனக்கும் ஆர்வம் இருக்கிறது. Blackmailஇற்குப் பதிலாக Whitemail என்ற பதத்தை இணையாகப் பயன்படுத்துவதில் என்னால் உடன்படமுடியாமலிருக்கிறது. ஒரு நிறவாதத்திற்கெதிரான இன்னொருநிறவாதமாகப் போய்விடும். நான் கீழுள்ளபடி யோசித்துப் பார்த்தேன்.
கறுப்புப்பணம் – கொள்ளையடித்த பணம்
Blackmail – பயமுறுத்தல் கடிதம்
கறுப்புநாள் – எதிர்ப்புநாள்/துக்கதினம் (குறிப்பிட்ட நாளைப் பொறுத்து)
………
இந்தவகையில் இணையான சொற்களைத் தேடலாமா?!

உங்களின் கூடுதல் விளக்கத்தையும், பின்னணியையும் எதிர்பார்த்திருக்கிறேன். அடுத்தமுறை இணைச்சொல் பற்றி விவாதிக்கும்போது ஆனந்தனுடன் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்களேன்.

பொடிச்சியும் தனது பதிவில் இது குறித்து அழகாக எழுதியுள்ளார். அதையும் பாருங்கள். (இணைப்பு மேலே கொடுத்துள்ளேன்)

**********************
இன்றைய திகதியில் 722 வலைப்பதிவுகள் தமிழ் இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வலைப்பதிவர்கள் தமது எழுத்துகளில் இத்தகைய மாற்றத்தைக் கொண்டுவந்தால் அது ஒரு ஆரம்பப்படியாக இருக்காதா?

எழுதியவர்: பொறுக்கி — 14 September 2005 @ 12:34

11.

//இன்றைய திகதியில் 722 வலைப்பதிவுகள் தமிழ் இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வலைப்பதிவர்கள் தமது எழுத்துகளில் இத்தகைய மாற்றத்தைக் கொண்டுவந்தால் அது ஒரு ஆரம்பப்படியாக இருக்காதா? //

நல்லது. நானும் வரவேற்கிறேன். குறைந்தபட்சம் எம்மால் எழுத்திலாவது செய்ய முடிவது பற்றி யோசிக்க வேண்டும். மாறாக எழுதுவதால் என்ன புரட்சி வந்துவிடப்போகிறதென்று இருப்பது நல்லதன்று.

எழுதியவர்: கொழுவி — 14 September 2005 @ 13:18

12.

நன்றி கொழுவி, எழுதுவது புரட்சி என்ற கனவுகள் எனக்கில்லை. ஆனாலும் “சும்மாயிருத்தல்”, “மௌனமாயிருத்தல்” என்றிருப்பதைவிட எழுதுவது முன்னேற்றமே. சேர்ந்து செய்வோம் என்ற உங்கள் ஆதரவு உற்சாகம் தருகிறது.

எழுதியவர்: பொறுக்கி — 15 September 2005 @ 12:44

EdsonApril 15th, 2010 at 01:52

Interesting post i totally agree with the comments above. Keep us posting

ElenaApril 20th, 2010 at 01:25

It is always pleasure to read your articles, will back here soon

கருத்து x கருத்து

கருத்து x கருத்து


Warning: Illegal string offset 'solo_subscribe' in /var/www/porukki/wp-content/plugins/subscribe-to-comments/subscribe-to-comments.php on line 304

Subscribe without commenting