எது பயங்கரவாதம்? (அமெரிக்கா-அல்கைடா.1)

செப்ரெம்பரரில் அமெரிக்க வர்த்தக வலயம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தோனேசியா, சவுதி, மொறொக்கோ, துருக்கி, ஸ்பானியா, எகிப்து என்று குண்டுவெடிப்பு தொடர்கிறது. இதற்கெல்லாம் காரணம் அல்கைடா என்று அரசுகளும், ஊடகங்களும் அடித்துச் சொல்கின்றன.

இன்றைய அல்கைடா அமெரிக்காவின் அன்றைய தயாரிப்பு. அப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த சோவியத்யூனியனை விரட்டுவதற்காக மிக விரைவாகவும், செழிப்பாகவும் பாகிஸ்தானில் வைத்து வளர்க்கபப்ட்ட அல்கைடாவை மேற்கு நாடுகளுக்கும், அமெரிக்க கூட்டு நாடுகளுக்கும் நன்றாகவே தெரியும். கணணிவலைத் தொடர்புகளிலிருந்து, ஆயுதப் பயிற்சி வரை டொலர் வாரியிறைக்கப்பட்டது.

சோவியத் யூனியன் உடைவின் பின் எதிரிகள் என்ற நிலமையில் மாற்றமேற்பட்டு எண்ணெயில் அமெரிக்கா கவனத்தை திருப்பியபோது அல்கைடாவின் நேசம் பகையாகிவிட்டது. அமெரிக்காவுக்கு நட்பாக இருக்கும் வரைக்கும் கண்டுகொள்ளாதுவிட்ட மேற்கு நாடுகளும் முந்தாநாள் இரவுதான் புதிதாகப் பிறந்ததைப்போல அல்கைடா பயங்கரவாதம் என்று அலறத் தொடங்கிவிட்டன. அமெரிக்காவின் கண்மூடித்தனமான அரபுநாடுகளின் மீதான இராணுவ ஆக்கிரமிப்பு இன்னும் பல மனிதக் குண்டுகளை அல்கைடாவுக்குப் பெற்றுத் தர, யுத்தம் பல முனைகளில் நடைபெறுகிறது.

ஊற்றுமூலம் பயங்கரவாதமா? விளைபொருள் பயங்கரவாதமா?

கருத்து x கருத்து

கருத்து x கருத்து


Warning: Illegal string offset 'solo_subscribe' in /var/www/porukki/wp-content/plugins/subscribe-to-comments/subscribe-to-comments.php on line 304

Subscribe without commenting