Microsoft plus Spyware

Microsoft இந்த வருட ஆரம்பத்தில் Anti Spyware மென்பொருளை வெளியிட்டபோது எனக்கு ஆச்சரியம்தான். கணனிப் பயனாளர்களை உளவு பார்ப்பதில் கொடிகட்டிப் பறக்கும் Microsft இற்கு என்ன நடந்தது? இத்தனை வருடம் தள்ளிப்போட்டுக்கொண்ட விடயத்தை இப்பொது ஏன் கையில் எடுத்தது என்று குழப்பம்தான். Microsft இன் Anti Spyware இனைப் பயன்படுத்திப் பார்த்த கணணிச் சஞசிகைகள் பலவும் நன்றாக வேலை செய்கிறது என்று வேறு பாராட்டிவிட்டார்கள்.

சென்ற கிழமை இணையத்தில் ஒரு தகவல். இதுவரை MS Spyware ஆக இனம் கண்ட Claria என்ற Spyware இப்போது கெட்டசாமான் இல்லையென்றும், அதை கணணியில் அழிக்காமல், பாதுகாத்து வைத்திருக்கலாமென்றும் Microsoft தெரிவிக்கிறது. போன கிழமைக்கு முன்வரை Spyware ஆக இனம் காணப்பட்டது திடீரென்று எப்படி Goodware ஆக மாறியது என்று டதேடினால், குறிப்பிட்ட Spywareக்குரிய Claria என்ற நிறுவனத்தை Microsft வாங்கிவிட்டதாம்!!!

உளவு பார்ப்பதையும் தான் மட்டுமே செய்ய வேண்டுமென்பதே Microsft அரசியல்.

இது பற்றிய மேலதிக தகவல்களுக்கு:
http://www.benedelman.org/news/063005-1.html

Microsoft உங்கள் கணணியில் உளவு பார்ப்பதைத் தடுப்பதற்கு:
http://xp-antispy.org/?lang=en&option=com_frontpage&Itemid=1

1 கருத்து x கருத்து

1.

வாருங்கள் பொறுக்கி (பெயர் என்னவோ போல் இருக்கிறதே!) உங்கள் வரவு நல்வரவாகுக.. இதனைப்பற்றி சுதர்சன் ஏற்கனவே எழுதியுள்ளார்.

உளவு பார்ப்பது மைக்ரோசாஃப்ட் மட்ட்மே செய்ய வேண்டும் என்ற் நினைப்பது மென்பொருள் தீவிரவாதம் தானே..

எழுதியவர்: contivity — 15 July 2005 @ 11:36

2.

“மட்ட்மே ” என்பதை மட்டுமே என்று படியுங்கள் தவறுக்கு மன்னிக்கவும்..

சுதர்சனின் பதிவு முகவரி http://vanampadi.blogspot.com/2005/07/blog-post.html

எழுதியவர்: contivity — 15 July 2005 @ 11:38

3.

வாழ்த்துக்கும், தகவலுக்கும் நன்றி contivity.

எழுதியவர்: பொறுக்கி — 18 July 2005 @ 02:26

4.

நல்ல பயனுள்ள கட்டுரை.

எழுதியவர்: பரஞ்சோதி — 24 November 2005 @ 03:33

கருத்து x கருத்து

கருத்து x கருத்து


Warning: Illegal string offset 'solo_subscribe' in /var/www/porukki/wp-content/plugins/subscribe-to-comments/subscribe-to-comments.php on line 304

Subscribe without commenting